மனித வாழ்க்கை ஒரு பயணமாகும். இந்த பயணத்தின் வெற்றிக்கு தேவையான தீர்மானங்களை சரியான நேரத்தில் நாம் எடுக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். பயணம் செய்யும் மனிதனுக்கு ஒரு நோக்கம் அவசியமாகும். நோக்கமற்ற பயணம் பயனற்றது. பிறப்பின் மூலமாக தொடங்கி மரணத்தோடு முடியகூடிய இந்த பயணத்தின் நடுவே அநேக தீர்மானங்களை நாம் எடுக்கின்றோம். ஆனால் வாழ்க்கையின் பயணத்திலே எங்கோ ஒரு திருப்புமுனை தேவைப்படுகிறது?
படிப்பின் மூலமாக, வேலையின் மூலமாக, தொழிலின் மூலமாக திருமணத்தின் மூலமாக, பட்டங்களும், பதவிகளும் கிடைப்பதின் மூலமாக, திடீரென பணக்காரராவதின் மூலமாக நம்முடைய வாழ்க்கையில் திருப்புமுனை உண்டாக வேண்டுமென்று நாம் விரும்புகிறோம் அதற்காக முயற்சியும் செய்கிறோம். இவைகளின் மூலமாக கிடைக்கும் சந்தோஷமும். சுகமும் மரணம் வரை மட்டுமே காணப்படும். நாம் சம்பாதித்த இவைகளை மரணத்திற்கு அப்புறம் நாம்மோடு கொண்டு செல்ல முடியாது. மரணத்தோடு இவ்வுலக பயணத்தை நாம் முடித்து கொண்டு வேறொரு இடத்திற்கு போகிறோம். காரணம், மனிதனுக்குள் அழியாத ஒரு ஆத்துமா உண்டு.
ஆத்துமா சரீரத்தைவிட்டு பிரியும்போது மரணம் உண்டாகிறது. இறுதியில் தேவன் இருக்க கூடிய இடமாகிய பரலோகத்திற்கோ அல்லது தண்டனையின் இடமாகிய நரகத்திற்கோ போகின்றது. இந்த இரண்டு இடங்களில் எங்கே போக போகிறோம் என்பதை உயிரோடே இருக்கும்போதே நாம் தீர்மானிக்க வேண!டும். மனிதன் பாவத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறான். பாவத்திலே வாழ்ந்து. பாவத்திலேயே மரிப்பான் என்றால் அவன் நித்திய நரகத்தை சென்றடைவான். நரகத்திற்கு போகும்படி பாவியாகிய மனிதன் இனி எதையும் செய்ய வேண்டாம். ஆனால் பரலோகத்திற்கு போக வேண்டுமென்றால் தெய்வீகமான நிபந்தனையை கடைபிடிக்க வேண்டும்.
இதற்காக நீங்கள் அறிந்திருக்க வேண்டியதும், கைக்கொள்ள வேண்டியதுமான தெய்வீக நிபந்தனை பரிசுத்த வேதாகமத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. மனிதன் பிறப்பினாலும், செயல்களினாலும் பாவியாயிருக்கிறான். “வித்தியசமே இல்லை, எல்லாரும் பாவம் செய்து. தேவமகிமையற்றவர்களானார்கள்” (ரோமர் 3:22, 23). பாவியாகிய மனிதனுடைய நற்செயல்களை தேவன் அங்கீகரிப்பதில்லை. நல்லவர்களாய் வாழ்ந்து மோட்சத்தை அடைவது என்பது மனிதனால் இயலாத காரியம். ஆகையால். பாவம் செய்து நித்திய நரகத்தை நோக்கி சென்று கொண!டிருக்கின்ற மனிதனின் மீது மனதுருகி, ஒரு இரட்சிப்பின் வழியை ஆயத்தம் செய்ய தேவனே மனித சாயலில் இந்த பூமிக்கு வந்தார், அவர் தான் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து. அவர்தாமே பாவபரிகார பலியாக சிலுவையில் மரித்தார். மனிதன் அனுபவிக்க வேண்டிய நரக தண்டனைக்கு பதிலாக அவர் வேதனைகளை சிலுவையில் சகித்தார் (பிலிப்பியர் 2:6-10). பரலோகத்திற்கான வழியை திறந்தார். மட்டுமல்ல அவர் தேவன் என்பதை நிரூபிக்கும்படியாக மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார், தன்னை விசுவாசிக்கிறவர்களை பரலோகத்திற்கு கொண்டு செல்ல மீண்டும் வருவார்.
மனிதனுடைய பாவபரிகாரத்திற்கு தேவையான எல்லாவற்றையும் இயேசுகிறிஸ்து சிலுவையில் நிறைவேற்றி முடித்தார். ஆனால், ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனும் தன்னுடைய பாவ மன்னிப்பிற்காக இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரணம் தனக்கு பதிலானது என்று விசுவாசிக்க வேண்டுமென அவர் விரும்புகிறார். “இயேசுகிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்” (யோவான் 1:12).
நீங்களும் பாவமன்னிப்பை பெற்றுக்கொள்ள விரும்பினால் உங்களுடைய பாவங்களை இயேசுகிறிஸ்துவிடம் இவ்விதமாக அறிக்கை செய்யுங்கள் (ரோமர் 10:9). “ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவே நான் ஒரு பாவி, என்னுடைய பாவத்திற்காக நீர் சிலுவையில் மரித்தீர் என்று விசுவாசிக்கிறேன். இயேசுகிறிஸ்துவே, உம்மை என்னுடைய ஆண்டவரும் இரட்சகருமாக என் உள்ளத்திலே ஏற்றுக்கொள்கிறேன். ஆமென்”.
ஆத்தும இரட்சிப்பிற்காக மனிதன் தானே அநேக வழிகளை தேடி ஏமாற்றமமையும்போது. தேவன் மனிதனுக்கு காண்பித்த வழியாகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசியுங்கள். இந்த தீர்மானம் உங்ககளுடைய வாழ்க்கையை ஒரு புதிய திருப்புமுனைக்கு நேராக நடத்தும் என்பது நிச்சயம். அப்பொழுது உங்கள் வாழ்க்கை பயணம் அர்த்தமுள்ளதும், நோக்கமுடையதும், சமாதானமும், சந்தோஷமுள்ளதாக மாறும்.
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
யோவான் 3:16.