தேவனுடைய  நற்செய்தியை  பல  வண்ணங்களில்  காண்போம் 

நாம் இந்த உலகில் காண்கின்ற யாவையும், உன்னையும் என்னையும் தேவன் படைத்தார் என்று பைபிள் சொல்கின்றது.
இந்த தங்க நிறம் பரலோகத்தில் இருக்கும் தேவனை நமக்கு நினைவூட்டுகிறது.
இந்த சிருஷ்டிகரான தேவன் பரிசுத்தரும் அன்புமுள்ள தேவன். அவர் மனுஷரோடு ஒரு அன்பான உறவு இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்

தேவன்

தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, தேவன் பரலோகத்-திலிருந்து-மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்.
சங்கீதம் 53:2.

தேவன் நம்மை குறித்து அனைத்தையும் அறிந்திருக்கிறார், நாம் செய்யும் தவறான செயல்களையும் அறிந்திருக்கிறார் என்று பைபிள் சொல்கிறது.
கருப்பு நிறம் பாவத்தை நமக்கு நினைவூட்டுகிறது. தேவனுக்கு பிரியமில்லாமல் நாம் செய்யும் அனைத்தும் பாவம்.
பாவம் தேவனைவிட்டு நம்மை பிரிக்கிறது. ஏனெனில், தேவன் பரிசுத்தமும் நீதியுமானவர். அவர் பாவத்தை தண்டிப்பவர்.

பாவம்

தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, தேவன் பரலோகத்-திலிருந்து-மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்.
சங்கீதம் 53:2.

தேவன் நம்மை மிகவும் நேசித்ததால், தம்முடைய ஒரேபேறான குமாரன் இயேசு கிறிஸ்துவை, நமக்காக அனுப்பினார்.
சிவப்பு நிறம், இயேசு கிறிஸ்து நமக்காக எவ்வாறு சிலுவையில் பாடுபட்டு, இரத்தம் சிந்தி, மரித்தார் என்பதை நினைவூட்டுகிறது. பின்பு அவர் பாவத்தையும் மரணத்தையும் ஜெயித்து உயிர்த்தெழுந்தார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி அப்பொழுது நீ இரட்சிக்கப்படுவாய்.

இயேசு

நாம் பாவிகளாயி-ருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணினார்.
ரோமர் 5:8.

வெள்ளை நிறம் சுத்தத்தை நினைவூட்டுகிறது.
நாம் நமது பாவத்தை அறிக்கையிட்டு இயேசு கிறிஸ்துவை நம்பும்பொழுது தேவனுடைய பார்வையில் நாம் சுத்தமாகிறோம் என்று பைபிள் சொல்கிறது.அவர் நமது பாவங்கள் அனைத்தையும் மன்னிக்கிறார்.
இயேசுவை கர்த்தராக ஏற்றுக்கொண்டு நாம் அவருடன் புதிய வாழ்கை வாழத் துவங்குவோம். அவருடன் நித்திய வாழ்வையும் தொடர்ந்து அனுபவிக்கலாம்.

புது வாழ்க்கை

இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்-குள்ளிருந்தால் புதுச் சிருஷ்டியா-யிருக்கிறான்.
2 கொரிந்தியர் 5:17

உயிருள்ள அனைத்தும் வளருகிறது.
பச்சை நிறம், நாம் நமது புதிய வாழ்வில் வளர வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது.
பைபிளை தினமும் வாசித்து, ஜெபத்திலே தேவனுடன் பேசுவதினால் நாம் ஆவிக்குரிய நிலையில் வளருகிறோம்.
மேலும், மற்ற கிறிஸ்தவர்களோடு ஐக்கியப்பட்டு, ஸ்தல சபையிலே அங்கமாயிருப்பதும் அவசியம்.

வளர்ச்சி

நீங்கள் வளரும்படி, புதிதாய் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.
1 பேதுரு 2:3

தேவனுடைய நற்செய்தி என்னவென்றால், அவர் உன்னை நேசிக்கிறார். நீ என்றும் அவருடன் இருக்க வேண்டுமென விரும்புகிறார்.
ஒவ்வொரு வண்ணத்தின் செய்தியை நினைவில் வைய்யுங்கள்

தங்கம்: பரலோகத்தில் உள்ள தேவனை ஞாபகப்படுத்துகின்றது.

கருப்பு: இருதயம் பாவத்தால் இருளானது என்று சொல்கிறது.

சிவப்பு: இயேசு நம் பாவத்திற்காக ரத்தம் சிந்தி மரித்தார்.

வெள்ளை: கிறிஸ்துவில் உள்ள புது வாழ்கையை காட்டுகிறது.

பச்சை: கிறிஸ்துவிற்குள் வளர்ச்சியை குறிக்கிறது

தேவன் உங்கள் இருதயத்தை காணும்போது, பாவத்தினால் இருளடைந்ததாக காண்கிறாரா? அல்லது இயேசு கிறிஸ்துவின் மூலம் கழுவப்பட்டு சுத்தமானதாகக் காண்கிறாரா? உன் பாவம் மன்னிக்கப்பட வேண்டுமென விரும்புகிறாயா? உன் இருதயத்தை தேவனிடம் திருப்பி இயேசு கிறிஸ்துவின் மேல் நம்பிக்கை வைக்க இதுவே சரியான நேரம்

வேத வசனம்

இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார்.

யோவான் 11:25, 26.

என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.

(ரோமர் 10:9)