The Christian Cartoons with the Joyful Message – by Mike Waters
Welcome to Joyful ‘toons
Adverse circumstances surrounding us could easily drive us into despair. And yet we have a hope that keeps us from sinking. That hope rests on Jesus, and what He did for us on the cross.
நம்மைச் சுற்றியுள்ள எதிரான சூழ்நிலைகள் நம்மை எளிதில் நம்பிக்கையில்லா நிலைக்கு தள்ளும். ஆயினும், நம்மை மூழ்கவிடாமல் பாதுகாக்கும் ஒரு நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கை, இயேசுவின் மீதும், அவர் சிலுவையில் நமக்காக செய்த கிரியைகளின் மீதும் உள்ளது.
As Christians, we have the assurance that when we die, our souls will move to heaven, where our Father in heaven has prepared a new place for us to dwell.
கிறிஸ்தவர்களாகிய நாம் இறக்கும் போது, நமது ஆத்துமா பரலோகத்திற்குச் செல்லும் என்று உறுதியளிக்கிறோம், அங்கு நமது பரம தகப்பன் நாம் வாழ்வதற்கு ஒரு புதிய இடத்தை ஆயத்தம் செய்துள்ளார்.
Just as the President of the United States has people protecting him wherever he goes, as believers in Jesus we have angels guarding us in all our ways.
அமெரிக்க ஜனாதிபதி எங்கு சென்றாலும், அவரைப் பாதுகாக்கும் மனிதர்களை போல, இயேசுவை விசுவாசிக்கும் நம்மையும், தேவதூதர்கள், நம்முடைய வழிகளிலெல்லாம் பாதுகாக்கிறார்கள்.
The only righteousness acceptable in heaven is the righteousness of God received through faith in Jesus Christ.
பரலோகத்தில் ஏற்றுக்கொள்ளப்படதக்க ஒரே நீதி, இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலம் பெறப்பட்ட தேவனுடைய நீதியாகும்.
One way that parents can make sure that their arrows (children) hit the target of God’s plan for their lives is by instilling in them good, Biblical training in childhood. Proverbs 22:6 says “Train a child in the way he should go, and when he is old he will not turn from it.”
ஒரு விதத்தில் பெற்றோர்களுக்கு தங்களுடைய அம்புகள் (பிள்ளைகள்), தங்கள் வாழ்க்கைக்கான தேவனுடைய திட்டத்தின் இலக்கை அடைவதை உறுதிசெய்யும் ஒரு வழி, சிறு வயதில் அவர்களுக்கு நல்ல, வேதாகம பயிற்சியை கொடுப்பதுதான். “பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து: அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்” என்று நீதிமொழிகள் 22:6 கூறுகிறது.
Jesus is the only person whose arrow has ever hit the target of God’s standard of righteousness. If put our faith in Jesus, God counts Jesus’ arrow the same as if it were our arrow.
தேவனுடைய நீதியின் தரத்தை எட்டிய ஒரே நபர் இயேசு மட்டுமே. இயேசுவின் மீது நம்பிக்கை வைத்தால், தேவன், நம்முடைய அம்பை இயேசுவின் அம்பைப் போலவே எண்ணுகிறார்.
God loves us and comforts us when we are hurting, as a mother would comfort a young child.
ஒரு சிறு குழந்தையை ஆற்றும் தாயை போல, நாம் காயப்பட்ட நேரத்தில், தேவன் நம்மில் அன்புகூர்ந்து, நம்மைத் தேற்றுகிறார்.
The stars may not spell it out in words, but we should get their message, that there is a creator.
நட்சத்திரங்கள் ஒருவேளை வார்த்தையினால் சொல்லமுடியாமல் இருக்கலாம், ஆனால் அவைகளை பார்க்கும்போது, ஒரு சிருஷ்டிகர் இருக்கிறார் என்ற செய்தியை நாம் அறிய வேண்டும்.
Satan’s lies can seem scary, but they are no match for the truth of God, found in His word.
சாத்தானுடைய பொய்கள் பயமுறுத்துவது போல இருக்கலாம், ஆனால், தேவனுடைய வார்த்தையில் உள்ள சத்தியத்திற்கு அது ஈடாகாது.
God has given us the gift of His grace in Jesus, and we must receive that grace by faith. But, unlike the toy that comes with “\batteries not included\”, God also supplies us with the faith we need to receive His grace.
இயேசுவுக்குள் தம்முடைய கிருபையை, தேவன் நமக்கு அளித்திருக்கிறார், அந்த கிருபையை விசுவாசத்தினாலே நாம் பெற வேண்டும். ஆனால், “\பேட்டரிகள் இணைக்கப்படாத\” பொம்மையைப் போலல்லாமல், அவருடைய கிருபையை பெறுவதற்குத் தேவையான விசுவாசத்தையும் தேவன் நமக்குத் தருகிறார்.
When you’re armed with the truth, you can stand up to the devil when he tries to steal your blessing.
சத்தியத்தின் ஆயுதத்தை நீங்கள் தரித்துக்கொண்டால், நம்முடைய ஆசீர்வாதங்களை எடுத்துப்போட பிசாசு முயற்சிக்கும்போது, அவனை உங்களால் எதிர்க்கமுடியும்.
When you find yourself in a situation that’s over your head, don’t give in to fear, but trust that God is able to sustain you in the midst of trouble.
சூழ்நிலைகள் தலைக்கு மேல போயிடிச்சுன்னு உணரும்போது, பயப்பட வேண்டாம். மாறாக, பிரச்சனைகளுக்கு மத்தியிலும் தேவன் உங்களைத் தாங்குவார் என்பதை நம்புங்கள்.
One way to let the peace of Christ rule in your heart is to be thankful for all the good things He has provided.
கிறிஸ்துவின் சமாதானம் உங்கள் இருதயத்தை ஆள்வதற்கு அனுமதிக்கும் ஒரு வழி – தேவன் அருளிய சகல நன்மைகளுக்கும் நன்றியுள்ளவர்களாக இருப்பதாகும்.
We should be discriminating about which words we allow through the door of our lips.
நம்முடைய உதடுகளின் வாயிலாக என்னென்ன வார்த்தைகளை பேசுகிறோம் என்பதை நாம் பிரித்தறிய வேண்டும்.